சாதியம் ஒழிந்து சமூகம் களைந்து இந்து சமயம் வலுப்பெற நான் என்னை தமிழ் நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பில் இணைத்து கொள்கிறேன்.
தமிழ்நாடு என் தாய்நாடு தமிழர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் என் தாய் திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன் நாட்டின் வளமான பல்வகை வழிவழி பெருமையை எண்ணி நான் பூரிப்படைகிறேன்
தமிழ் மண்ணில் தோன்றிய சித்தர்களும், ஞானியர்களும், நாயன்மார்களும் புகழ்பட போற்றி வளர்த்த இந்து சமய அறநெறி – கொள்கைகளை பேணி காப்பதற்கு தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பில் என்னை இணைத்து கொண்டு என் நாட்டிற்காகவும் எனது நாட்டு மக்களுக்காகவும் எந்நாளும் அயராது ஆன்மீக சேவை பணியாற்றுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்
என் தாய் மண்ணோடும் தாய் மொழியோடும் பின்னி பிணைந்திருக்கிற பண்பாடு, மற்றும் கலாச்சாரத்தையும் இந்து சமய நெறிமுறைகளையும் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தார் நெறிமுறைகள் மாறாமல் எம்மால் ஆன ஆலய சீர்திருத்த இந்து சமய ஆன்மீக அறப்பணிகளை செவ்வனே செய்வேன் என்றும் தனி மனித ஒழுக்கத்துடனும் அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் முழு மனதோடு உண்மையாக பணியாற்றுவேன்
என்று உறுதியளிக்கிறேன்.