admin@hinduthirukovil.in    +91 98400 50613
எங்களை பற்றி
தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டில் பல்வேறு இந்து மதப் பிரிவினர் மற்றும் மற்ற நிறுவனங்கள், கோயில்கள், ஆகியனவற்றை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பு நமது பெருமைமிகு சமுதாயத்தின் ஒளிமிகுந்த மதம், கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகிய தளங்களில் அதன் சாதனைகளைக் கொண்டாட ஒரு மேடையாக உதவுகிறது. தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு இந்து மதக்கலாச்சாரம், நாகரிக மதிப்புகள் பின்பற்றுவதில் சிறந்து வழி நடத்தி செல்கிறது.
இக்கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் களப்பணி மேற்கொண்டு பின்னர் வெற்றிகரமாக 2013ல், "தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு" என பதிவு செய்யப்பெற்று இன்று நாட்டின் மிகப் பெரிய தன்னார்வ அமைப்பு ஆக சிறந்து விளங்குகின்றது. மற்றும் இந்து மதம் சார்ந்த பல்வேறு அம்சங்களையும் தன்னலமற்ற சேவையாக கடைப்பிடித்து ஒரு வழிகாட்டியாக இருந்து வருகின்றது.
தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு இந்து மதம் சமூகத்தைக் குறிக்கும் ஒரு அற்புதமான செயல்பாட்டு அமைப்பாக முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது கூட்டமைப்பின் முக்கியமான நோக்கம் அனைத்து இந்திய குடும்பங்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் உண்மையான பாரம்பரிய முறையில் அனைத்து முக்கிய மைல்கற்கள், சடங்குகள் மற்றும் திருவிழாக்களை, இந்துமத வேத அறிஞர்கள், கோவில் குருக்கள் உறுதுணையுடன் கொண்டாட வழிவகைகள் செய்யப்படும். நமது கூட்டமைப்பு நமது இந்து சமூகத்தை சார்ந்த விசுவாசிகள், ஆர்வலர்கள், பக்தர்கள் தங்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து அர்ப்பணிப்புக்கொண்ட இந்துக்களின் ஒன்றிணைப்பு மூலம் அனைத்து முக்கிய சந்தர்ப்பங்களிலும் இந்து மத சார்ந்த விழாக்களைக் கொண்டாட குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

மாநில அணி
மாநிலத் துறையின் செயல்பாடு, உள்கட்டமைப்பு, மேம்பாடு மற்றும் கோவில்களின் நிர்வாகத்தை ஊக்குவிக்க மாநில அளவிலான மாவட்டக் குழுக்கள் மற்றும் இந்து மதத்தின் பழமைவாத கொள்கைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவை வழங்குதல் ஆகும்.
மாநில குழு கூட்டமைப்பு அரசு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை கண்காணிக்கும். கோயில்களின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு, திருவிழாக்களுக்கான நிதி தேவைகள் நிதி ஆதாரங்களையும் மாநில குழு ஆய்வு செய்யும். கோயில்களின் கூட்டமைப்பின் மேம்பாட்டுக்கான கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களை திருத்தி அமைப்பதற்கான திட்டத்தையும் மாநில குழு பரிசீலிக்கும்.
மாநிலக் குழு 10 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். மேலும் நம்பிக்கை மற்றும் பொறுப்பு உள்ளவர்கள், மாநில குழுவால் நியமிக்கப்படுவார்கள்.
மாண்புமிகு நீதிபதி Dr. TN. வள்ளிநாயகம்
மாண்புமிகு நீதிபதி Dr.TN.வள்ளிநாயகம்
கெளரவ ஆலோசகர் - TNHTF
லதா சபாபதி
திருமதி லதா சபாபதி
கெளரவ தலைவர் - TNHTF

மாண்புமிகு நீதிபதி திரு R சடையாண்டி
மாண்புமிகு நீதிபதி திரு R சடையாண்டி
கெளரவ ஆலோசகர் - TNHTF
திருமதி குட்டி பத்மினி
திருமதி குட்டி பத்மினி
கெளரவ தலைவர் - TNHTF

திருமதி ஜெயந்தி கண்ணப்பன்
திருமதி ஜெயந்தி கண்ணப்பன்
கெளரவ ஆலோசகர் - TNHTF
 

எங்கள் மாநிலக் குழுவைக் காண இங்கு கிளிக் செய்க

மாவட்ட அணி
இந்து திருக் கோயில் கூட்டமைப்பினருக்கு பல்வேறு விதத்திலும் உதவுவதற்காகவும், கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு உறுதுணையாகவும் திகழ மாநில அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட உறுப்பினர்களும் அந்தந்த மாவட்டத் தலைவரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு இந்து கோவில்களின் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் உதவும் வகையில் செயல்படுவார்கள். இக்குழு பல திட்டங்களை மேம்படுத்துவதற்கும், உதவி செய்வதற்கும், சமூக உறுப்பினர்களின் கருத்துக்களை செயலாக்க உதவுவதுடன் செயல்முறைக்கான இலக்குகளையும் நிர்ணயிக்க செயல்படுகிறது. கூட்டமைப்பு செயல்படும் இவ்விதம், இந்துமதம் மற்றும் கோவில் தொடர்புடைய நடவடிக்கைகள் சம்மந்தமாக பல்வேறு திட்டங்களை நிறைவு செய்ய கூட்டமைப்பு நிர்வாகத்திற்கு பயன்படும் விதமாக அமையப்பட்டுள்ளது. நமது உறுப்பினர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து உறுப்பினரல்லாதவர்கள், மற்றும் ஏனையோரிடம் தொடர்பு கொண்டு, இந்து மதம் மற்றும் இந்து மத கோவில்கள் பற்றிய சித்தாந்தங்கள் பற்றி முடிந்தவரை அதிகபட்ச தகவல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
எங்கள் முழு மாவட்டக் குழுவைக் காண இங்கு கிளிக் செய்க
உள்ளடக்கப்பட்ட மாவட்டங்கள்

Best Viewed on 1024 X 768 and above.