|
தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு, தனது முதன்மைப் பணியாக, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்காக நடக்கும் நிகழ்வுகளை முன் நின்று நடத்துகிறது.
|
|
தமிழ்நாட்டிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள பழைய கோயில்களின் தேவைக்கேற்ப புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவது.
|
|
அனைத்து கோவில்களிலும் பூஜைகள் புத்துயிர் பெறுவதை உறுதிப்படுத்தவும் அதன் தொடர்ச்சியாக எப்போதும் பூஜைகள் வழிபாடுகள் தொடர்ந்து நடக்க உதவி செய்வது.
|
|
தேவைக்கேற்ப சுற்றுச்சுவர்கள், புனரமைப்பு மற்றும் நடைபாதைகள் நிறுவுதல், மற்றும் நீர் நிலைகள் மற்றும் நீர் வசதிகளை உருவாக்குதல்.
|
|
கோயில்களை பாதுகாப்பதற்காக கதவுகள், இரும்பு வாயில்கள், மின் இணைப்புகளை நிறுவுதல் மற்றும் கோயில்களில் மின் விளக்குகள் நிர்மாணித்தல்.
|
|
கோவிலில் தடைபெற்றிருக்கும் திருவிழாக்களை மறுபடி புதுப்பித்தல் மற்றும் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவை.
|
|
புதர்கள், வேண்டாத செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றிலிருந்து கோயில்களை அட்டவணையிட்டு அவ்வப்போது சுத்தம் செய்தல், கோவில் குளங்கள் மற்றும் குளங்களைத் தூர்வாருதல் மற்றும் புனரமைப்பு.
|
|
மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் வளர்ப்பது மற்றும் புராணங்களுடன் தொடர்புடைய பாரம்பரிய வரலாற்று மதிப்புகள் மிக்க மரங்கள் மற்றும் தாவரங்களை திட்டமிடுவது மற்றும் அதனைப் பாதுகாப்பது (சுருக்கமாக சொல்ல, ஆகம விதிகளின் படி நந்தவனம் உருவாக்குவது)
|
|
சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியினருக்கு சாதி மற்றும் மதத்தின் எந்தப் பிரிவினையுமின்றி உதவுவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவது.
|
|
இந்து கோயில்களை மரபு வழித்துணையிலும் ஆகம விதிப்படி வழிநடத்துதலை கற்றுத்தரவும், பக்தர்களை ஈர்ப்பதற்காக. அவசியமான தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க உறுதி பூணுதல்.
|
|
எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் 63 நாயன்மார்கள் சன்னிதிகளின் தேவையான இடங்களில் நிறுவ வேண்டும்.
|
|
வேதங்கள், ஆகமங்கள், திருமுறைகள் கற்றுக் கொடுக்க பாடசாலைகள் தொடங்குதல் ஆகியவற்றுடன், வழக்கமாக கோவிலில் நடத்தப்படும் ஆன்மீக முறைகளில் உதவுதல்.
|
|
புராணங்களிலும், ஆகமங்களிலும், வரையறுக்கப்பட்ட கோயில் பூஜைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்துதல்.
|
|
தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு ஏழைகளின் கல்வி, உடல் ஊனமுற்றோர், பெண்கள், விதவைகள், கைவிடப்பட்டோர் மற்றும் சமூகத்தில் பலவீனமான பின்தங்கியவர்கள் மற்றும் சமுதாயத்தின் பலவீனமான பிரிவினர் ஆகியோரின் வாழ்க்கை மேம்பாட்டையும் முன்னேற்ற ஊக்குவிக்கிறது.
|
|
தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு மேலே கூறப்பட்ட காரணங்களை ஊக்குவிக்கவும் செயலாக்கவும் பொது, அரசு மற்றும் பிற அரசு நிறுவனங்களிலிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறது.
|
|
தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு ஏழைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களின் படிப்பிற்காக தேவைப்படும் உதவிகளையும் மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்களை வழங்குவதன் மூலம் அவர்களின் படிப்பு தடையுறாமலிருக்க ஊக்குவிக்கிறது.
|
|
நம் கூட்டமைப்பு பல்வேறு சொத்துக்களை வாங்குவதற்கும் அவற்றை வாடகைக்கு விடுவதற்கும் முயற்சிகள் எடுப்பதினால், அத்தகைய வருமானங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு குறிக்கோள்களுக்காக பயன்படுத்தப்படலாம்.
|