இக்கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் களப்பணி மேற்கொண்டு பின்னர் வெற்றிகரமாக 2013ல், "தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு" என பதிவு செய்யப்பெற்று இன்று நாட்டின் மிகப் பெரிய தன்னார்வ அமைப்பு ஆக சிறந்து விளங்குகின்றது.
மற்றும் இந்து மதம் சார்ந்த பல்வேறு அம்சங்களையும் தன்னலமற்ற சேவையாக கடைப்பிடித்து ஒரு வழிகாட்டியாக இருந்து வருகின்றது.
கூட்டமைப்பு செயல்படும் இவ்விதம், இந்துமதம் மற்றும் கோவில் தொடர்புடைய நடவடிக்கைகள் சம்மந்தமாக பல்வேறு திட்டங்களை நிறைவு செய்ய கூட்டமைப்பு நிர்வாகத்திற்கு பயன்படும் விதமாக அமையப்பட்டுள்ளது. நமது உறுப்பினர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து உறுப்பினரல்லாதவர்கள், மற்றும் ஏனையோரிடம் தொடர்பு கொண்டு, இந்து மதம் மற்றும் இந்து மத கோவில்கள் பற்றிய சித்தாந்தங்கள் பற்றி முடிந்தவரை அதிகபட்ச தகவல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.