நாம் யார்?

தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டில் பல்வேறு இந்து மதப் பிரிவினர் மற்றும் மற்ற நிறுவனங்கள், கோயில்கள், ஆகியனவற்றை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பு நமது பெருமைமிகு சமுதாயத்தின் ஒளிமிகுந்த மதம், கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகிய தளங்களில் அதன் சாதனைகளைக் கொண்டாட ஒரு மேடையாக உதவுகிறது. தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு இந்து மதக்கலாச்சாரம், நாகரிக மதிப்புகள் பின்பற்றுவதில் சிறந்து வழி நடத்தி செல்கிறது.

இக்கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் களப்பணி மேற்கொண்டு பின்னர் வெற்றிகரமாக 2013ல், "தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு" என பதிவு செய்யப்பெற்று இன்று நாட்டின் மிகப் பெரிய தன்னார்வ அமைப்பு ஆக சிறந்து விளங்குகின்றது. மற்றும் இந்து மதம் சார்ந்த பல்வேறு அம்சங்களையும் தன்னலமற்ற சேவையாக கடைப்பிடித்து ஒரு வழிகாட்டியாக இருந்து வருகின்றது. தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு இந்து மதம் சமூகத்தைக் குறிக்கும் ஒரு அற்புதமான செயல்பாட்டு அமைப்பாக முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது கூட்டமைப்பின் முக்கியமான நோக்கம் அனைத்து இந்திய குடும்பங்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் உண்மையான பாரம்பரிய முறையில் அனைத்து முக்கிய மைல்கற்கள், சடங்குகள் மற்றும் திருவிழாக்களை, இந்துமத வேத அறிஞர்கள், கோவில் குருக்கள் உறுதுணையுடன் கொண்டாட வழிவகைகள் செய்யப்படும். நமது கூட்டமைப்பு நமது இந்து சமூகத்தை சார்ந்த விசுவாசிகள், ஆர்வலர்கள், பக்தர்கள் தங்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து அர்ப்பணிப்புக்கொண்ட இந்துக்களின் ஒன்றிணைப்பு மூலம் அனைத்து முக்கிய சந்தர்ப்பங்களிலும் இந்து மத சார்ந்த விழாக்களைக் கொண்டாட குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

Logo
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு
2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

உறுப்பினர் தேடல்

உறுப்பினர் அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடவும்.