மதுரையில் தென் மண்டல பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு தென்மண்டலம் சார்பில் மதுரை மாநகரில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டத்தில் சிறந்த சேவை செய்தமைக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.மேலும் திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி தஞ்சாவூர் திருப்பூர் மாவட்டம் மற்றும் கலந்து கொண்ட அனைத்து பொருப்பாளர்களுக்கும் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாநில தலைவர் உயர்திரு.செந்தில் ஜி மற்றும் மாநில செயலாளர் உயர்திரு.முத்துக்குமார் ஜி தென் மண்டல பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் திரு.பாக்கியராஜ் ,திரு மணிமாறன் ஜி திரு.ஜெயக்குமார்‌ஜி ,திரு.ஆறுமுகம்ஜி ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சி யினை சிறந்த முறையில் நடத்தி சிறப்பித்தனர். முக்கிய தீர்மானங்கள்: 1.மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் அந்தந்த பொறுப்பாளர்கள் முன்னிலையில் மண்டல மாவட்டங்களும் இணைந்து கூட்டங்கள் நடத்திடவும் , 2.மண்டல மாவட்டங்களில் மாதத்தில் ஒரு முறையேனும் அன்னதானம் மற்றும் உழவார பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், 3.இந்து சமய அறநிலைமயத்துறை கட்டுப்பாடு கீழ் இருக்கும் கோவில்கள் மற்றும் பிற கோவில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் இணைந்து செயலாற்றும் படியும், 4.மாவட்டங்கள் வாரியாக நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் திருக்கோயில் வழிபாட்டு முறைகள் நலிவுற்ற கோவில்கள் கோவில் ஆக்கிரமிப்பு பிடியில் இருப்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட பொருப்பாளர் கருடன் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

04 August 2026

அனைத்து ஆல்பங்கள்

உறுப்பினர் தேடல்

உறுப்பினர் அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடவும்.